Home »
எமது பகுதிச் செய்திகள்
» கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு ! ஆளுநர் அறிவிப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு ! ஆளுநர் அறிவிப்பு
(இரா.சயனொளிபவன் )கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வௌ்ளிக்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத சம்பத் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் ஆபாத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டத்தில் மாகாண தலைமைச் செயலாளர் துசிதா பி. வனிகசிங்க, ஆளுநரின் செயலாளர். மதநாயக்க, கல்வி அமைச்சின் மாகாண செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபாண்டா மற்றும் மாகாண , மாவட்ட செயலகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் திட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: