Advertisement

Responsive Advertisement

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

 


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்தமதகுருமார் பலர் இன்று ஜனாதிபதி செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மனுவொன்றையும் சுகாதார அமைச்சரிடம் கையளித்தனர்.

சிங்களராவய உட்பட பல அமைப்புகளை சேர்ந்த பௌத்தமதகுருமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்தபிக்குகளுக்கும் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பதற்றமானநிலையேற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வந்ததை தொடர்ந்து கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என கோரும் தங்கள் மனுவை பௌத்தமதருமார் அவரிடம் கையளித்தனர்.

Post a Comment

0 Comments