(நூருள் ஹூதா, ஐ.எல்.எம். நாஸிம்)INSPIRED திட்டத்தின் கீழ் ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் GAFSO நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் "பொருளாதார அபிவிருத்தியினூடாக சமூகங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஊக்குவித்தல்" எனும் கருப் பொருளின் ஊடாக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேச மின் உபகரண விற்பனையாளர் பிர்தௌஸ் முகம்மட் ரௌபிக்கு முதற்கட்ட மானிய ஊக்குவிப்பு தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை (29) வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் GAFSO நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜெ. காமில் இம்டாட் மற்றும் கள உத்தியேதகத்தர் எச்.ஆர்.எம். இஸ்மத் ஆகியோர் கலந்து கொண்டு காசோலையை வழங்கி வைத்தனர்.
0 Comments