கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகளை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்து வருகின்றது.
தொற்றாளர்களின் அதிகரிப்புக்கேற்ப அடையாளம் காணப்படும் இடங்களில் பீ.சி.ஆர் , மற்றும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று (28.12.2020) கல்முனை பொதுச்சந்தையில் வர்தத்கர்களுக்கான பீ.சி.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குண.சுகுணன் உட்பட சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சௌக்கிய பரிசோதகர்கள், இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன செய்யப்பட்டன.
பரிசோதனைக்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதற்கிடையில் பல வர்த்தகர்கள் கடைகளை மூடிவிட்டு தலைமறைவாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது பல வர்த்தக கடைகள் மூடப்பட்டு காணப்பட்டன.
இன்றைய பரிசோதனையின் முடிவிகளின் பின்னர் பொதுச்சந்தை திறப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் வர்த்தக நடவடிக்கைக்கு ள் பீ.சி.ஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனை செய்த அறிக்கையுடன் வருபவர்களே அனுமதிக்கப்படுவார்கள் என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார்.
0 comments: