நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு ஏற்பட்ட சுகயீனத்தை அடுத்து அந்த கைதி கடந்த 20 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. பின்னர் குறித்த கைதி தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்றாம் இலக்க சிறைக் கூடத்தில் இருந்த 86 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 42 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை நீர்கொழும்பு இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 15 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் மொத்தமாக 58 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: