Advertisement

Responsive Advertisement

ஒத்தி வைக்கப்படுகிறதா சாதாரண தரப்பரீட்சை? கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

 


தற்போதைய சூழ்நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை உரிய திகதி நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்த இறுதி தீர்மானம் இரு நாட்களுக்குள் அறிவிக்கப் படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தினத்தில் பரீட்சையை நடத்துவதா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்த இறுதி தீர்மானத்தை 2 நாட்களுக்குள் எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டால் , மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராக மேலதிகமாக 6 வார காலம் வழங்கப்படும். அத்தோடு பரீட்சையை நடத்த புதிய திகதி அறிவிக்கப்படும்.

குறித்த காலப்பகுதியில் 11 ஆம் தர மாணவர்களின் பாடத் திட்டம் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான விசேட நடவடிக்கை கல்வி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments