களுத்துறை, அளுத்கம பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அளுத்கம பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சிலர் இவ்வாறு தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை மணப்பெண் உட்பட மேலும் இருவருக்கு முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்ற சுமார் 70 பேருக்கு RAPID ANTIGEN பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்
0 Comments