அவுஸ்திரேலியாவின் விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையில் உள்ள ஆற்றில் மூழ்கி இலங்கைத் தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் (28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று நண்பர்களுடன் ஆற்றுக்கு சென்றிருந்த இவர், அங்கு நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாகவும், பாரிய தேடுதல் நடவடிக்கையின் பின் நேற்றையதினம் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுதிறது.
புகலிடம் கோரி அவுஸ்திரேலியா வந்த இவர் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக தெரிய வருகிகிறது.
0 Comments