பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் வெயங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேலியகொடை மேல்மாகாண வடக்கு குற்றவியல் பிரிவினரால் சந்தேகநபர் ஒருவர் கடந்த தினம் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 19 ஆம் திகதி வெயாங்கொடை மாளிகாதென்ன பிரதேசத்தில் நபரொருவரை துண்டுத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் சில கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் ஆவார்.
இன்று காலை குறித்த சந்தேகநபருடன் சுற்றிவளைப்பொன்றிற்காக பேலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வெயாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கம்பிடிய பிரதேசத்திற்கு சென்றிருந்தனர். அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை தொடர்ந்து குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபரின் செயற்பாடுகள் காரணமாக பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
0 comments: