Home » » மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற 16ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!!

மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற 16ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்டு 16ஆண்டு நினைவு இன்று பல்வேறு இடங்களில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.


அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில் இன்று அதன் 14வது ஆண்டிநினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர், புதுமுகத்துவாரம், நாவலடி ஆகிய பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்கள் நடைபெற்றன.

திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

கிறிஸ்தவ முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உறவுகளால் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.தயாபரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரகளான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று புதுமுகத்துவாரம் பகுதியில் இந்து மத வழிபாட்டு முறைகளுக்கு அமைவாக சுனாமி அனர்த்ததினால் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது சுனாமியில் உயிர்நீர்த்தவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று கடலில் அவர்களுக்கான பிராயசித்தம் செய்யப்பட்டது.

இப்பகுதிகளில் சுனாமி அனர்த்தம் காரணமாக 1800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்த நிலையில் பல கோடி ரூபா சொத்துகள் இழக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |