அமெரிக்க மக்கள் அனைவருக்குமான அதிபராகாவே நான் இருப்பேன் என்று ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜோ பிடன் தெரிவித்து
ள்ளார்.
இதேவேளை அனைவருக்கும் சமநிலையை தருவதே எமது ஜனநாயகத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270ஐ கைப்பற்றிவிட்டால் வெள்ளை மாளிகையில் அமர்ந்து உலகையே விரலசைவில் ஆட்டிப்படைக்க முடியும் என்பதால், நாற்காலியை தக்க வைப்பதற்கு டொனால்ட் ட்ரம்பும், நாற்காலியை கைப்பற்றுவதற்கு ஜோ பிடனும் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜோ பிடன் தொடர்ந்தும் முன்னிலை பெற்று வருகிறார். இதனால் ஜோ பிடன் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக வருவது உறுதியாகி விட்டது.
அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதின் விளைவே முடிவுகள் வெளியாவதில் தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
0 comments: