Advertisement

Responsive Advertisement

மூன்று வாரங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் முடக்கப்படுமா கொழும்பு? விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 


கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளை மூன்று வார காலம் முடக்கி, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர எல்லைக்குள் அதிகளவில் கொவிட் தொற்று பரவி வருகின்ற நிலையிலேயே அவர் இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

மூன்று வார காலம் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முடக்காத பட்சத்தில், இந்த வைரஸ் தொற்றானது, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ளவர்களை வெளியில் வர விடாத வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், கொழும்பு மாநகர எல்லைக்குள் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர, குறையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு மாநகர எல்லையை முடக்காத பட்சத்தில், இந்த தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சிரமமானது எனவும் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments