Advertisement

Responsive Advertisement

தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த யுவதி மரணம்.

 (எப்.முபாரக்)

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஆடை தொழிற்சாலை

யில் கடமையாற்றிக் கொண்டிருந்த யுவதி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இச்சம்பவம் நேற்று(16) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி தம்பலகாமம்- கல்மெடியாவ , இலக்கம் 147 எக்ஸத் மாவத்த பகுதியைச் சேர்ந்த ஹேவாநம்பிகே சுபோதா பியங்கனி (வயது 31) எனவும் தெரியவருகின்றது.

தம்பலகாமம் நோர் லங்கா ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பதோடு மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments