Advertisement

Responsive Advertisement

சிறைச்சாலையில் பதற்றம்! ஒருவர் கொலை, மற்றொருவர் தப்பி ஓட்டம்

 


கண்டி - போகம்பரை சிறைச்சாலையில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போகம்பரைச் சிறைச்சாலையில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.

இங்குள்ள ஐந்து கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றது

தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும் மூன்று கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளார். இதனால் சிறைச்சாலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments