பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது தற்போது திட்டமிட்டபடி எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும்,
பாடசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியில் இருந்து மாணவர்களுக்கு இணையவழி மூலமாக கற்றல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments