Home » » யாழ்.பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

யாழ்.பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

 


யாழ். பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் கல்விகற்கும் மாணவர் ஒருவரே இன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன், யாழ் – நாகர்கோயிலை நிரந்தர வசிப்பிடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே சடலமாக மீட்கபட்டுள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் கோப்பாய் – வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவனின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |