எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் 5G வலையமைப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளமையினை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் தெற்காசியாவின் முன்னோடியாக 5G வலையமைப்பை இலங்கை அறிமுகப்படுத்தவுள்ளதை ஊக்குவிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் சீனாவில் 200 மில்லியன் 5G இணைப்புகளை ஏற்படுதத் திட்டமிட்டுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
மேலும் இது உலகளாவிய 5G இணைப்புகளின் அடிப்படையில் 85 வீதமாகும் எனவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments