இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
தெமடகொடை. கிருலபனை. இரத்மலான. கொழும்பு 10 மற்றும் கொழுப்பு 02 ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை. நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 401 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி. நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 75ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 799 பேருக்கு, இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 12 ஆயிரத்து 210 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
அத்துடன், 516 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆயிரத்து 799 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக 6 இலட்சத்து 80 ஆயிரத்து 843 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments: