அமெரிக்காவில் செவ்வாய் கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அமெரிக்காவில் உள்ள மொத்த 538 தொகுதிகளின் அடிப்படையில் ஜனாதிபதி பெரும்பான்மையின் அடிப்படையில் தெரிவாவார். அதன்படி 270 தொகுதிகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
அதன்படி தற்போது வரையான காலத்தில் 478 தொகுதிகளுக்கான களநிலவரம் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் 264 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலையில் உள்ளார். அதேவேளை குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 214 தொகுதிகளை கைப்பற்றி அடுத்த நிலையில் உள்ளார்.
0 comments: