Advertisement

Responsive Advertisement

222 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


இலங்கையில் இதுவரையில் 222 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அலுவலர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 56 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை பதுளை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு 2 ஆயிரத்து 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களுடன் தொடர்புடைய சுமார் 1407 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments