திருகோணமலையில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வைத்தியருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வைத்தியருடன் பணியாற்றிய ஏனைய மூன்று வைத்தியர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகத் தலைவர்
தெரிவித்துள்ளார்.
0 comments: