தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.
சீரற்ற கால நிலையினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, பலத்த காற்றும் வீசுகின்றது.
வளங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தினால் கடல் சீற்றமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நகர்ந்து செல்லும் வரை மீனவர்களும் மற்றும் கடற்றொழில் ஈடுபடுபவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவித்துள்ளார்.
0 comments: