கல்வி நடவடிக்கைகளை வீட்டில் இருந்தவாறே தொடரும் வகையில், கல்வி அமைச்சினால் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள குருகுலம் தொலைக்காட்சி சேவைக்கான நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
நாளை அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்த கல்வி சேவைக்கான நேர அட்டவணை, எதிர்வரும் 22ஆம் திகதி வரை பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 வரை இந்த கல்வி சேவை ஒளிபரப்பாகும் என கல்வி அமைச்சு குறிப்பிடுகின்றது.
3ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொலைக்காட்சி ஊடாக இந்த கல்வி நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் வீட்டில் இருந்தவாறே கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
0 comments: