மட்டக்களப்பு- பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
மகிழடித்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 66வயதுடைய ஆண் ஒருவர் நேற்று (2020.11.11) வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவர் பொலநறுவையில் இருந்து வருகைதந்த பின்னர் கடந்த ஆறு தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இவர் இன்று வீட்டில் உயிரிழந்துள்ள நிலையில் பீசிஆர் சோதனை நடாத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென கண்டறியப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
0 comments: