பிறந்த குழந்தையை பாக்கச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி பரிதாபகரமாக பலியானார்
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் 09-11-2020 இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்சிக்கி குடும்பஸ்தர் ஆன 29 வயதுடைய புவனேசிங்கம் சுவேகாந்தன் என்பவர் பரிதாபகரமாக 10-11-2020 அன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் நேற்று அதிகாலை மட்டக்களப்பு வைத்தியசாலையில் தனக்கு கிடைத்த குழந்தையினை பார்ப்பதற்கு தனது வீட்டிலிருந்து திக்கோடை பிரதேசத்தினூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அதே வீதியினூடாக எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.
0 comments: