Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தாய்க்கு கொரோனா பரிசோதனை; மன உளைச்சலில் மகன் தற்கொலை

 


கொரோனா தொற்று பரிசோதனை செய்ய பெண் ஒருவரை சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்றதால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய 25 வயது மகன் தற்கொலை செய்துகொண்ட சோகச்சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.


ஹோமாகம தோலவத்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மஹரகமவில் உள்ள மீன் கடையில் கொள்வனவு செய்திருக்கிறார்.

அந்த மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்பான பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண்ணும் களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டபோது மன அழுத்தத்திற்கு உள்ளாகிய அவரது விசேட தேவையுடைய மகன் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்

Post a Comment

0 Comments