Advertisement

Responsive Advertisement

பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

 


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

இதேவேளை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கவேண்டாம் என அரசதரப்பு சட்டத்தரணியினால் முன்வைக்கப்பட்ட வாதமும் நிராகரிக்கப்பட்டதுடன் - சிறைச்சாலை ஆணையாளர் அனுமதி வழங்கினால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியும் என நீதிபதி இதன்போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments