(லியோன்)
வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் வருகை தரும் நபர்கள் தொடர்பான தகவல்களை பெரும் நடவடிக்கையினை மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பரம்பல் நிலையினை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகளினால் முன்னெடுக்கும் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு பொலிஸாரும் இணைந்து பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை பின்பற்றுவது போன்ற அறிவுருத்தல்களை வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் மட்டக்களப்பு பொதுசுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகளினால் ஒலிபெருக்கி மூலம் கிராமங்கள் தோறும் அறிவுறுத்தும் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நகர் பகுதிகளில் இது தொடர்பான அறிவுறுத்தல் நடவடிக்கையினை மட்டக்களப்பு பேருந்து தரிப்பட பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டன.
0 comments: