Advertisement

Responsive Advertisement

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீயினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம் !!!!

 


(ரீ.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இன்று காலை 10.00 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட பாரிய தீயினைக் கட்டுப் படுத்த பொலிசாரும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினரும் பாரிய முயற்சியினை மேற்கொண்டபோதிலும் சுமார் இரு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியாது பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.

மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு முகவர் நிலையமுமாகும். இதனால் அயல்வாசிகள் தமது வீடுகளை விட்டு சில மணிநேரம் வெளியேறியதையும் அவதானிக்க முடிந்தது.

மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான பாதையை மூடிய பொலிசார் போக்குவரத்திற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தினர்.






Post a Comment

0 Comments