வவுனியா கருங்காலிகுளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை மடுக்கந்தை விசேட அதிரடிபடையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கருங்காலிகுளம் பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக மடுக்கந்தை விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று நள்ளிரவு அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் வவுனியா வனவள அதிகாரிகளால் இக்கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான 8 முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் வாகனத்தையும் கைப்பற்றியதுடன் இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
0 Comments