Home » » மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ! கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு!

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ! கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு!

 


மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .


மட்டக்களப்பு நகரில் இன்று ஒருவருக்கு கொரனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் கொரனா தொற்றாளர்களின் தொகை 90 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,


”கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையில் இருந்து ஆரம்பித்த இந்த பரம்பலானது மாகாணத்தின் பல இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டுவருகின்றது. பேலியகொட மீன்சந்தை கொத்தனிக்கு பின்னர் பீசிஆர் பரிசோதனைகள் ஊடாக இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் 90 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை பிராந்தியத்தில் 07நபர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 நபர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 13நபர்களும் கல்முனை பிராந்தியத்தில் 20நபர்களுமாக மொத்தமாக 87பேர் சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையின் ஊடாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.


இன்றும் நேற்றும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புதிதாக ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் கொழும்பில் இருந்து 13 நாட்களுக்கு முன்னர் திரும்பியவர்.எதேச்சையாக அவர் அடையாளம் காணப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனை மூலமாக தொற்றுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.அதேபோன்று செங்கலடியில் வியாபாரம் செய்யும் நபர் ஒருவர் மட்டக்களப்பினை சேர்ந்தவருக்கு தொற்று உறுதிப்படுத்தியுள்ளது.


கொழும்பில் இருந்து பயணம் செய்தபோது தொற்று ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கோறளைப்பற்று மத்தியில் பேலியகொடவுடன் நேரடியாக தொடர்புபட்ட ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அதேபோன்று கல்முனை பிராந்தியத்தில் இறக்காமம் பகுதியில் ஏற்கனவே கொரனா தொற்றுக்குள்ளாகியிருந்த ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருவர் தொற்றுள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.இதேபோன்று அம்பாறை,தெகியத்தன்கண்டிய பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரையில் தனது வீட்டுக்கு வந்துசென்றுள்ளார்.


கிழக்கு மாகாணத்தில் தற்போதைக்கு காத்தான்குடி ஆதார வைத்தியசாலை,ஈச்சிலம்பற்று ஆதார வைத்தியசாலை,கரடியனாறு வைத்தியசாலை,பாலமுனை வைத்தியசாலை,பதியத்தலாவ வைத்தியசாலையென ஐந்து வைத்தியசாலைகள் கொவிட் தொற்றுள்ளவர்களை பராமரிக்கின்ற வைத்தியசாலையாக காணப்படுகின்றது.கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றுள்ள அனைவரும் கிழக்கு மாகாணத்திற்குள்ளேயே பராமரிக்ககூடிய நிலைகாணப்படுவதையிட்டு ஓரளவு திருப்தியடைகின்றோம்.


சில மாகாணங்களில் தொற்றுள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு அனுப்பும் நிலையிருக்கின்றது.ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஐந்து வைத்தியசாலைகள் காணப்படுகின்ற காரணத்தினால் கிழக்கு மாகாணத்தில் தொற்றுள்ளவர்களை அவர்களுக்கு சிகிச்சையளித்து பராமரிக்கின்ற நிலையேற்படுத்தப்பட்டுள்ளது.


தற்போது காத்தான்குடி வைத்தியசாலையில் 94கொரனா தொற்றாளர்களும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் 06நபர்களும் கரடியனாறு வைத்தியசாலையில் 71பேரும் பதியத்தலாவ வைத்தியசாலையில் 20நபர்களும் பாலமுனை வைத்தியசாலையில் 70நபர்களுமாக 261பேர் தற்போது பராமரிக்கப்பட்டுவருகின்றனர்.


பேலியகொட தொற்று ஏற்பட்டதன் பின்னர் மொத்தமாக 624பேர் பராமரித்திருக்கின்றோம்,பராமரித்துக்கொண்டிருக்கின்றோம்.கடந்த மூன்று நாட்களுக்குள் 361பேரை நாங்கள் சுகப்படுத்தி அவர்களை வீடுகளுக:கு அனுப்பியுள்ளோம்.


கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுவருகின்றனர்.கிழக்கு மாகாணத்தில் ஒரு குறிப்பிட்டளவிலேயே பி.சி.ஆர் சோதனை செய்யமுயுடிம்.தொற்றுள்ளவர்கள் பலர் காணப்படலாம்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியில் இனங்காணப்பட்ட நபர் பல இடங்களுக்கு பிரயாணம் செய்துள்ளார்.அதேபோன்று ஏறாவூரில் இனங்காணப்பட்டவரில் ஒருவர் மீன்சந்தையுடன் தொடர்புடையவர் மற்றையவர் கொழும்பில் இருந்துவந்தவர்.மீன்சந்தையுடன் தொடர்பட்டவரின் தொற்று தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை.பல ஊகங்களுக்கு மத்தியில் அந்த நபருடன் சார்ந்தவர்களையும் தனிமைப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.


கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் சுகாதார பிரிவினரால் தெரிவிக்கப்படும் விடயங்களை சரியான முறையில் பின்பற்றுங்கள்.அவ்வாறு நீங்கள் அதனை கடைப்பிடிக்கும்போதே கொரனா தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்கமுடியும்.


அனைத்து துறையினரும் இந்த தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இயலுமான செயற்பாடுகளை முன்னெடுத்தவருகின்றனர்.இருந்தபோதிலும் தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.தொற்றுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது.எங்களால் மட்டும் அனைவரையும் கண்காணிக்கமுடியாது.பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.அவசியமான தேவைகள் இருந்தால் மட்டும் வெளியே செல்லுங்கள்.வெளியில் செல்லும்போது அருகில் செல்வதை தவிர்த்து சமூக இடைவெளியையும் தனிநபர் இடைவெளியையும் பின்பற்றுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |