இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 08 ஐ சேர்ந்த 87 வயது ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று மற்றும் பக்டீரியா தொற்று, சுவாசப்பை கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பம்பலப்பிட்டியை சேர்ந்த 80வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று மற்றும் நியூமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று மற்றும் நீரிழிவு காரணமாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது.
0 Comments