Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கோறளைப்பற்று மத்தியில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, தற்போதைய நிலமையின்படி மட்டக்களப்பில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 94ஆக தொற்று உயர்ந்துள்ளதுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.அத்துடன் மக்கள் சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட சட்டதிட்டங்களை சரியான முறையில் கடைப்பிடித்து வெளியில் தேவையில்லாது நடமாடுவதை குறைத்து வீடுகளில் இருக்குமாறும், சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறருடனான உரையாடலின் போது முகக்கவசத்தை முறையாக அணியுமாறும் வெளி இடங்களுக்கு போய் வந்தவுடன் கை, கால்களை கழுவுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை உடனடியாக பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவித்து அவருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments