தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விதிமுறைகளை மீறியதாக 15 பேர் ட்ரோன் கமெராக்களின் உதவியுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளாதாக அஜித் ரோஹன இன்று அறிவித்திருந்தார்.
இதன்படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், இடம்பெறும் பயணங்களைக் கண்காணிக்க இன்று முதல் விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments