Advertisement

Responsive Advertisement

திருகோணமலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி- கிழக்கு மாகாணத்தில் மொத்த எண்ணிக்கை 108ஆக அதிகரிப்பு!!

 


கிழக்கு மாகாணத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா  தொற்றுறதியாகியுள்ளது.


வாழைச்சேனை - கோரளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

அதேநேரம், கொழும்பு - வெள்ளவத்தையில் இருந்து திருகோணமலைக்கு சென்று மரண சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்ட ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபருடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 67 பேரும் திருகோணமலையில் 14 பேரும் கல்முனையில் 20 பேரும் அம்பாறையில் 7 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படியில், கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும் சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments