கொரோனா தொற்று காரணமாக நேற்று (21) நாட்டில் மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்களும், நான்கு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அதிகூடிய மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.
01. கொழும்பு 02 ஐ சேர்ந்த 57 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
02. வெல்லம்பிடியை சேர்ந்த 65 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
03. தெமட்டகொடையை சேர்ந்த 89 வயது ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
04. கொழும்பு 10 ஐ சேர்ந்த 48 வயது பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
05. கொழும்பு 10 ஐ சேர்ந்த 72 வயது ஆண் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
06. கொழும்பு 13 ஐ சேர்ந்த 69 வயது பெண் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
07. வெள்ளவத்தையை சேர்ந்த 79 வயது ஆண் முல்லேரியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
08. வெல்லம்பிடியை சேர்ந்த 75 வயது பெண் ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
09. கொழும்பு, 76 வயது பெண் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வடைந்துள்ளது.
0 Comments