Home » » உங்களை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது நாங்கள் தான்! மீறினால் தோற்கடிப்போம் - கடுமையாக எச்சரிக்கும் பௌத்த சங்கம்

உங்களை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது நாங்கள் தான்! மீறினால் தோற்கடிப்போம் - கடுமையாக எச்சரிக்கும் பௌத்த சங்கம்

 


இந்த அரசாங்கத்தை ஆட்சிக் கொண்டு வந்தவர்கள் பௌத்த சங்கத்தினரே ஆகும். பௌத்த சங்க சபையினருக்கு செவிகொடுக்காது செயற்பட்டால், அதனை தோற்கடிக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் 20ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வருவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இரட்டைக் குடியுரிமை விவகாரம் பௌத்த சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பில், முருத்தெட்டுவே ஆனந்த மற்றும் எல்லே குணவங்ச தேரர் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை தொடர்பான ஷரத்து நீக்கப்படும் வரை தொடர்ந்தும் போராடப் போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

நாராஹென்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பௌத்த சங்க சபையினரே முன்னோடியாக இருந்து பாடுபட்டனர் எனவும் பௌத்த சங்க சபையினருக்கு செவிகொடுக்காது செயற்பட்டால், அதனை தோற்கடிக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இங்கு கருத்து வெளியிட்டுள்ள எல்லே குணவங்ச தேரர், தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரும் ஊர்வலத்தில் நாங்களே சென்றோம்.

எனினும் தற்போது வேறு நபர்களை இணைத்துக்கொண்டு ஊர்வலத்தில் செல்ல முயற்சித்து வருகின்றனர். இதற்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |