Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் தீவிர பாதுகாப்புடன் நாடாளுமன்றம் அழைத்துவரப்பட்ட ரிஷாட்

 


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளவதற்காகவே அவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால் இரு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மரண தண்டனைக் கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவும் சிறைச்சாலை அதிகாரிகளால் இவருடன் அழைத்து வரப்பட்டிருந்தார்.

Post a Comment

0 Comments