Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு காணி அனுமதிப்பத்திரம்

 


எப்.முபாரக்)

கிழக்கு மாகாணத்தில் காணி அனுமதிப் பத்திரம் இதுவரை பெற்றுக் கொள்ளாத பாடசாலைகளுக்கு காணி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கான விபரங்கள் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திரட்டப்படுகின்றது.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவின் வழிகாட்டலின் பேரில் வலயக் கல்வி அலுவலகங்கள் இந்த தகவல் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

பாடசாலையின் பெயர் முகவரி கிராம உத்தியோகத்தர் பிரிவு பிரதேச செயலகப் பிரிவு காணியின் பரப்பு நிலஅளவைப் படம் இருந்தால் அதன் இலக்கம் என்பன போன்ற விபரங்கள் தற்போது திரட்டப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு காணி அனுமதிப் பத்திரம் இல்லாத பாடசாலைகளுக்கு காணி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விபரம் தேவைப்படின் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments