Advertisement

Responsive Advertisement

சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீர் மரணம்- குளியாப்பிட்டிய பகுதியில் சம்பவம்!!

 


குளியாப்பிட்டிய – கய்யால பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


இதன்படி, குறித்த பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சில குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், 80 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென குளியாப்பிட்டிய மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் வீட்டில் உள்ள அனைவருக்கும் PCR பரிசோதனை முன்னெடுக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments