தியத்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருத்தலாவ பகுதியில் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். பலத்த காயமடைந்த குறித்த பெண் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முருத்தலாவ- கல்ஏதண்ட பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
மேலும், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments