இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 109 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் பேலியகொடை மொத்த விற்பனை மீன்சந்தை ஊழியர்கள் 49 பேருக்கு கொரோனா தொற்று இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்புனை பேணிய 23 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5920 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, 2 ஆயிரத்து 406 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருவதோடு, 356 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 44 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments