Home » » பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியானது

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியானது

 


2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி சற்றுமுன் வௌியிடப்பட்டுள்ளது.

www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை 41,500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |