Advertisement

Responsive Advertisement

இராணுவத்தளபதி மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி...!!

 


கொரோனா தொற்றுப்பரவல் குறித்து நாட்டு மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.


நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா தொற்று ஏற்பட கூடுமென எதிர்பார்க்கப்படும் இடங்களுக்கு தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் ஊரடங்கு சட்டம் அமுல்படுதப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் சஞ்சரிப்பதை பார்க்க கூடியதாக உள்ளது.

ஆகவே பொதுமக்களிடம் நாம் மீண்டும் கேட்டுக்கொள்வது ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டாலோ அல்லது இல்லை என்றாலும் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுவதோடு, வெளியிடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் ஊழியர்கள் சேவைக்கு அழைக்காது நிறுவனங்களை நடாத்தி செல்லுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது” என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments