Advertisement

Responsive Advertisement

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் ஆலோசனைகள்!

 


எதிர்வரும் ஞாயிறுக்கிழமை இடம்பெறவுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கலந்துகொள்ளவுள்ள மாணவர்கள் அவர்களுக்கான பரீட்சை இலக்கத்தை சீருடையின் வலது புறத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை பரீட்சைக்கு முதல் முறையாக பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பரீட்சாத்திகளை அழைத்து வரும் பெற்றோர் பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

இடைவேளை நேரத்திலும் இவர்களின் பெற்றோருக்கு பரீட்சை மத்திய நிலைய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

இதேவேளை இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்காகவும் விடேச அலோசனைகளை வழங்கியுள்ளது. இதற்கு அமைவாக இந்த பரீட்சை ஆரம்பமாகவுள்ள தினத்தன்று காலை 7.30 மணியளவில் அனைத்து பரீட்சாத்திகளும் பரீட்சை மத்திய நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை 12 ஆம் திகதி காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

Post a Comment

0 Comments