Home » » புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

 


5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  என்பனவற்றை பிற்போடுவது தொடர்பில் இன்று அல்லது நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கொவிட் 19 தாக்கம் காரணமாக பரீட்சைகளை எவ்வாறு நடத்துவது என்பது பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த குறித்த இரண்டு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. அதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 12ஆம் திகதியும், 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் 11 ஆம் திகதியும் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு மத்தியில், இணையதள முறைமை மூலம் மாத்திரமே பரீட்சை பெறுப்பேற்று சான்றிதழ்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் காரணங்களினால், பரீட்சைகள் திணைக்கள வளாகத்திற்குள் பொதுமக்கள் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |