Advertisement

Responsive Advertisement

அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியது அரசாங்கம்!

 


கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.


நேற்றைய தினம் சமூகத்திலிருந்து பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவல் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக முறையான சுகாதார வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் எந்தவொரு பொது நிகழ்வுகளிலும் பங்கேற்காமல் இருத்தல், வீடுகளை விட்டு வெளியேறும் போது முகக்கவசங்கள் அணிதல், உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டுமெனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments