ஷமி மண்டூர்)கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் கொண்டு சென்ற ரயிலில் மட்டக்களப்பு சந்திவெளியில் ஒருவர் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை(24) இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி வைத்தியசாலை வீதி கடற்கரை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்ற ரயிலில் சந்திவெளி பகுதியில் காலை 4.50 மணியளவில் மோதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றிய விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments