Advertisement

Responsive Advertisement

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதூஷ் உயிரிழப்பு

 


மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார்.


மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.



இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments