Advertisement

Responsive Advertisement

வடகொரியாவைக் கண்டு நடுங்கும் உலக வல்லரசு! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாதுகாப்பு செயலர்

 வட கொரியாவின் ஆளும் கட்சியின் ஆண்டு விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதன் போது ராணுவ அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த அணிவகுப்பில் அதிநவீன ஏவுகணையை அந்நாட்டு ராணுவம் காட்சிப்படுத்தியிருந்தது என சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், வடகொரியாவின் ஏவுகணை உலக பாதுகாப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார் எனவும் செய்தி வெளியாகிது. அவரின் கருத்து சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பென்டகனில் தென் கொரிய பாதுகாப்பு மந்திரி சு வூக்குடனான சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

வட கொரியாவின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்கள் பிராந்தியத்தின் மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு


கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். மேலும் கொரிய நாடுகளின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான தனது நட்பு தொடர்பில் கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், கொரிய தீபகற்பத்தின் தெற்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் செலவில் பெரும் பங்கை தென்கொரியா செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் 28,500 அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது வட கொரியாவுக்கு ஒரு தடுப்பாகக் கருதப்படுகிறது. இது ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு மற்றும் திறனைப் பற்றி சீனாவிற்கு மறைமுகமாக சவால் விடுவதாகவும் கருதப்படுவதபகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சு ஹூனும் இந்த வாரம் வாஷிங்டனில் தனது அமெரிக்காவுடன் அறிவிக்கப்படாத சந்திப்புகளுக்காக சென்றுள்ளார் என்று தென் கொரியாவின் ஜனாதிபதி அலுவலகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

Post a Comment

0 Comments